Monthly Calendar - Dinamalar No.1 Tamil News Paper
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
மாதாந்திர நிகழ்வுகள்
<<    மார்ச், 2010    >>

ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
2
மார்ச் 2. சரோஜினி நாயுடு (1879 - 1949): :

கவிக்குயில் என்று அழைக்கப்பட்ட சரோஜினி, தன்னுடைய கவித்திறனால் இந்தியா முழுவதும் விடுதலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சுதந்திர போராட்டத்தின் போது பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவின் நிலை, காங்கிரசின் நோக்கங்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தார். தண்டியில் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட போது, ஒரு பிடி உப்பை அள்ளி சரோஜினியிடம் அவர் வழங்கியது முக்கியமான வரலாற்று நிகழ்ச்சியாகும். இந்து, முஸ்லிம் <ஒற்றுமைக்காக, ஜின்னாவிடம் இவர் பேச்சு வார்த்தை நடத்தியவர். இந்தியாவின் முதல் பெண் கவர்னர் இவரே. 1949 மார்ச் 2ல் இவர் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

மார்ச் 2. சரோஜினி நாயுடு (1879 - 1949):

3
மார்ச் 3. அலெக்சாண்டர் கிரகாம்பெல் (1847 - 1922) : :

டெலிபோன் உள்ளிட்ட 12 கண்டுபிடிப்புகளை உலகுக்கு அளித்த புகழ் பெற்ற விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரகாம்பெல். இவர் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் நகரில் 1847ம் ஆண்டு பிறந்தார். இவரது தாயார் கேட்கும் திறனை இழந்தவர் என்பதால், ஒலி தொடர்பான ஆய்வுகளில் ஆர்வம் காட்டினார். 1876ல் தொலைபேசியை உருவாக்கினார். மிகச்சிறந்த ஆசிரியராகவும், நிர்வாகியாகவும் கிரகாம்பெல் திகழ்ந்தார். புகழ் பெற்ற "நேஷனல் ஜியோகிரபிக் சொசைட்டி'யை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.

மார்ச் 3. அலெக்சாண்டர் கிரகாம்பெல் (1847 - 1922) :

டெலிபோன் உள்ளிட்ட 12 கண்டுபிடிப்புகளை உலகுக்கு அளித்த புகழ் பெற்ற விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரகாம்பெல். இவர் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் நகரில் 1847ம் ஆண்டு பிறந்தார். இவரது தாயார் கேட்கும் திறனை இழந்தவர் என்பதால், ஒலி தொடர்பான ஆய்வுகளில் ஆர்வம் காட்டினார். 1876ல் தொலைபேசியை உருவாக்கினார். மிகச்சிறந்த ஆசிரியராகவும், நிர்வாகியாகவும் கிரகாம்பெல் திகழ்ந்தார். புகழ் பெற்ற "நேஷனல் ஜியோகிரபிக் சொசைட்டி'யை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.

4
5
6
7
மார்ச் 7. பரமஹம்ச யோகானந்தா (1893 - 1952) : 1893 :

ஜனவரி 5ல், கோரக்பூரில் பிறந்தார். மதம், இனம், கலாசாரம் ஆகியவற்றை கடந்து தனது அருளுரை மூலம் உலகத்துக்கு ஞான ஒளியேற்ற வந்தவர் என அவரது சீடர்களால் அழைக்கப்படுகிறார். அமெரிக்காவிலும் தனது அருளுரையை பரப்பினார். 1952ம் ஆண்டு மார்ச் 7ல் மறைந்தார்.

மார்ச் 7. பரமஹம்ச யோகானந்தா (1893 - 1952) : 1893

ஜனவரி 5ல், கோரக்பூரில் பிறந்தார். மதம், இனம், கலாசாரம் ஆகியவற்றை கடந்து தனது அருளுரை மூலம் உலகத்துக்கு ஞான ஒளியேற்ற வந்தவர் என அவரது சீடர்களால் அழைக்கப்படுகிறார். அமெரிக்காவிலும் தனது அருளுரையை பரப்பினார். 1952ம் ஆண்டு மார்ச் 7ல் மறைந்தார்.

8
9
மார்ச் 9. கரன்சிங் (1931 - ) : :

பன்மொழிப்புலமை, கவிதை மற்றும் எழுத்தாற்றல் திறனில் சிறந்து விளங்குபவர். இவர் 1931 மார்ச் 9ல் காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்குக்கும், மகாராணி தாரா தேவிக்கும் மகனாக பிரான்சில் கேன்ஸ் நகரில் பிறந்தார். இவரது இளமைப்பருவம் புகழ்பெற்ற டூன் பள்ளியில் ஆரம்பமானது. ஸ்ரீநகரிலும், டில்லியிலும் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். 1967, 1971 மற்றும் 77ல் காஷ்மீரில் உள்ள உதாம்பூர் தொகுதியிலிருந்து போட்டியிட்டு காங்., சார்பில் எம்.பி., ஆனார். இந்திரா அமைச்சரவையில் சுற்றுலா, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பதவி வகித்தார். சரண்சிங் அமைச்சரவையிலும் பங்கேற்றவர். தத்துவ அறிஞர் அரவிந்தர் தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். சிறந்த கல்வியாளர். தூதரகப் பொறுப்புகள் வகித்து இந்தியாவின் பெருமையை உயர்த்தினார்.

மார்ச் 9. கரன்சிங் (1931 - ) :

10
11
12
13
14
15
16
17
மார்ச் 17. தலாய் லாமா (1935 - ) ::

 தலாய் லாமா என்ற பெயருக்கு அமைதிக்கடல் என்று பெயர். 1959ல் சீன நாடு திபெத்தைக் கைப்பற்றியதால் தலாய்லாமா உள்ளிட்ட 80 ஆயிரம் திபெத்தியர்கள் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். தலாய்லாமாவுக்கு தஞ்சம் வழங்கியதோடு உ.பி.,யில் தர்மசாலா அமைக்க இந்தியா உதவியதால் இது இந்திய சீன உறவில் ஒரு நெருடலாக இன்றும் இருந்து வருகிறது. உலகம் முழுவதும் சீடர்களை பெற்றுள்ள இவருக்கு நோபல் பரிசும் கிடைத்தது. அமைதியான முறையில் திபெத்தின் விடுதலைக்கு ஆர்வம் காட்டும் இவரின் கோரிக்கையை சீனா ஏற்கவில்லை. இவர் ஆன்மிகம், அரசியல் மட்டுமின்றி அறிவியலிலும் ஆர்வம் கொண்டவர்.

மார்ச் 17. தலாய் லாமா (1935 - ) :

18
மார்ச் 18. ருடால்ப் டீசல் (1858 - 1913) : :

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிறந்தவர் டீசல். இவரது பெற்றோர்கள் ஜெர்மனியை சேர்ந்தவர்கள். இவரது கண்டுபிடிப்பினால் கப்பல்களும், ரயில்களும் நிலக்கரியிலிருந்து டீசலுக்கு மாறின. 1898ல் இவருடைய பெயரினால் ஆன இன்ஜினுக்கு காப்புரிமை பெற்றார். எரிபொருள் மற்றும் காற்று கலவைக்கு இந்த இன்ஜினில் பொறி தேவைப்படவில்லை. 1913ல் லண்டனுக்கு சென்ற கப்பலில் இவர் திடீரென காணாமல் போனார். 10 நாட்களுக்கு பின் அவரது உடல் கிடைத்தது. மரணத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. தற்கொலை அல்லது நிலக்கரி சுரங்க முதலாளிகள், ஜெர்மானியர்கள் இவரை கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மார்ச் 18. ருடால்ப் டீசல் (1858 - 1913) :

19
20
21
22
23
24
25
26
27
28
29
30
மார்ச் 30: சத்யஜித்ரே ஆஸ்கர் வென்ற தினம்:

சத்யஜித்ரே மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில் 1921ல், பிறந்தார். இவர் ஒரு திரைப்பட மேதை. இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். பதேர்பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார் போன்ற அழியா திரைக்காவியங்களை உருவாக்கியவர். 37 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 32 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 1992ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பாரதரத்னா விருதை பெற்றார். அதே ஆண்டு மார்ச் 30ம் தேதி வாழ்நாள் சாதனையாளருக்கான கவுரவ ஆஸ்கர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியரும் இவரே. பிரான்சின் கவுரவ விருதினையும் பெற்றுள்ளார். 1992ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி மறைந்தார்.

மார்ச் 30: சத்யஜித்ரே ஆஸ்கர் வென்ற தினம்

31