குறள் பால் குறள் இயல்
அதிகாரம்
(அல்லது)
குறள் எண் வாயிலாக தேடுக :  
 
கடவுள் வாழ்த்து

  • ( குறள் எண் : 1 )
    விளக்கம்
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு
  • ( குறள் எண் : 2 )
    விளக்கம்
    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்
  • ( குறள் எண் : 3 )
    விளக்கம்
    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்
  • ( குறள் எண் : 4 )
    விளக்கம்
    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல
  • ( குறள் எண் : 5 )
    விளக்கம்
    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
  • ( குறள் எண் : 6 )
    விளக்கம்
    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்
  • ( குறள் எண் : 7 )
    விளக்கம்
    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது
  • ( குறள் எண் : 8 )
    விளக்கம்
    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது
  • ( குறள் எண் : 9 )
    விளக்கம்
    கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை
  • ( குறள் எண் : 10 )
    விளக்கம்
    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்

Share  
Bookmark and Share